#தமிழகம் | ஆபாச வீடியோ! மிரட்டிய அரசியல் புள்ளி! தட்டி தூக்கிய போலீஸ்! - Seithipunal
Seithipunal


ஆபாச வீடியோவை வைத்து மிரட்டிய வழக்கில் நான்கு பேரை மயிலாடுதுறை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 2 லட்சம் ரூபாய் பணம் பறித்த ஒரு மர்ம கும்பல், அவரை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி உள்ளனர்.

மேலும் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க, பொதுப்பணித்துறை அதிகாரியிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் தெரிய வருகிறது.

இது குறித்து மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி காவல்துறையில் உடனடியாக புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், பொதுப்பணி துறை அதிகாரியை வீடியோ எடுத்து மிரட்டிய கில்லி பிரகாஷ் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில், கில்லி பிரகாஷ் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி துணைச் செயலாளராக இருப்பதும் போலீசாரின் விசாரணைகள் தெரிய வந்துள்ளது. 

மேலும் கில்லி பிரகாஷ் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார் என்றும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆபாச வீடியோ மிரட்டல், வீடியோ கால் மூலம் மிரட்டல், தவறாக சித்தரித்தல் மற்றும் உங்களை செல்போன் மூலமாக யாரேனும் மிரட்டினால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுக வேண்டும்.

மாறாக மிரட்டலுக்கு பயந்து அவர்களுக்கு அடி பணிய அல்லது வேறு ஏதேனும் தவறான முடிவுகளை எடுக்க கூடாது என்று சமூக ஆர்வலர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai Killi prakash arested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->