#மயிலாடுதுறை || திடீரென பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு... போலீசார் குவிப்பு... சாலை மறியல்... பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம், மேலப்பருத்துக்குடியில் நேரடி நெல் விதைப்புக்கு விவசாய கூலித் தொழிலாளிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காவல்துறை பாதுகாப்புடன் விவசாயிகள் வயலில் நேரடியாக நெல்லை விதைத்தனர். மேலும் அந்த பகுதிகள் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, மேல பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையில் குறுவை சாகுபடிக்கு திட்டமிட்டுள்ளனர். 

இதன் காரணமாக களையெடுப்பு, நாற்று பறித்தல் உள்ளிட்ட விவசாய கூலி பணிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்றும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் எதிர்ப்பு தெரிவித்த விவசாய கூலி தொழிலாளிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கடந்த இருபத்தி ஏழாம் தேதி கிருஷ்ணமூர்த்தி என்பவர் வயலில் நடைபெற்ற நேரடி நெல் விதைப்பு முறையை தடுத்து நிறுத்தினர்.

இதன் காரணமாக போலீசாருக்கும், கூலி தொழிலாளி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 38 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் பருத்துக்குடி கிராமத்தில் மூன்று விவசாயிகள் தங்களது 13 ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய தயாராகினர். 

இதற்காக மேல பருத்திக்குடி, கீழ பருத்திக்குடி, காலனி தெரு உள்ளிட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றுப்பகுதிக்கு இன்று காலை 6 மணி முதல், இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கோட்டாட்சியர் அறிவித்தார்.

இதனை அடுத்து போலீசார் மேல பருத்தகுடி பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும் விவசாயிகள் 13 ஏக்கர் அந்த நிலத்தில் நேரடி நெல்விதைப்பு முறையில் நடவு செய்தனர்.

இந்த சம்பவத்தால் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் ஒரு பரபரப்பு, பதற்றமான சூழ்நிலை நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayiladuthurai mela paruthikudi 144


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->