கடுமையாக நடந்து கொண்ட மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்தினர்-நடிகை நமீதா புகார்! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில்  மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை நமீதா, தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானார்.  மேலும், இவர் சினிமாவில் அறிமுகமான சில மாதங்களில், இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார்.  

பின்னர் இவர் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். அதோடு இவர் அனைவரையும் ‘மச்சான்’ என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார். இந்நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என்று நடிகை நமீதா குற்றம் சாட்டி தற்போது காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இன்று தனது கணவருடன் தரிசனத்திற்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவரை தடுத்து நிறுத்திய அதிகாரி முத்துராமன் என்பவர் நமிதா இந்து என்பதற்கான சான்றிதழ் காண்பிக்குமாறு கூறியதாகவும், தன்னிடம் அவமரியாதையாக நடந்து  கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும் நடிகை நமீதா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meenakshiyamman temple management who behaved harshly actress Namitha complained


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->