கனமழையால் நீச்சல் குளம் போல் காட்சி தரும் மெரினா கடற்கரை.!   - Seithipunal
Seithipunal


சமீபத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று தமிழகத்தை அச்சுறுத்தி வந்தது. இந்த புயலுக்கு மான்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மான்டஸ் புயல் சென்னை மாமல்லபுரம் அருகே மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் அதிகாலை மூன்று மணியளவில் கரையை கடந்தது. இதனால் சென்னை முழுவதும் மிகுந்த பாதிப்புக்குள்ளானது.

புயல் கரையை கடந்தாலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன் படி பெய்த மழையால், மெரினா கடற்கரை மணற்பரப்பு முழுவதும் மழைத்தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதையடுத்து அங்குள்ள மழைத் தண்ணீரில் பாசி பிடித்து துர்நாற்றம் வீசுகிறது. அந்த தண்ணீரில் கொசுகளும் உற்பத்தியாகி வருகின்றன. 

இதனால் அந்த பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்றும் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடற்கரையில் உள்ள பெட்டிக்கடையில் மற்றும் ரத்தினங்கள் என அனைத்தும் பழுதடைந்து வீணாகி உள்ளது.

இதனால், மெரினாவுக்கு அருகிலுள்ள பொதுமக்கள் தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்றும், கொசுக்கள் பரவாமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

merina beach fill water due to heavy rain


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->