மேட்டுப்பாளையம் அருகே விடிய, விடிய மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் ஜடையம்பாளையம் ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 

இந்த ஊராட்சி மக்களுக்கு மூலையூர் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களுக்காக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதற்கிடையே  ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. 

இதனால் ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வீராசாமி நகர், காந்திபுரம், கோழி பண்ணை, பழையூர் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரி தொடர்ந்து நள்ளிரவிலும் மறியலில் ஈடுபட்டனர். 

இதனை அடுத்து இரண்டாவது நாளாக இன்றும் காலை 6 மணியில் இருந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த அறிந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி தலைவர் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettupalayam peoples protest issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->