#சற்றுமுன் | மேட்டூர் அணையிலிருந்து 150000 கனஅடி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்துவிடப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்துவிடப்பட்டு வருகிறது .

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் மதியம் 2.30 மணி முதல் 150000 கனஅடி வரை திறந்துவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 170000 கன அடி வரை அதிகரிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனால், காவிரி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காவிரி கரையோர மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettur Dam to Cauvery River Release 150000 cubic feet water


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->