மேடையில் குத்தாட்டம் போட்ட மேயர் - மகிழ்ச்சியில் தஞ்சை மக்கள்.! - Seithipunal
Seithipunal


மேடையில் குத்தாட்டம் போட்ட மேயர் - மகிழ்ச்சியில் தஞ்சை மக்கள்.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதாவது, தஞ்சாவூர் கோர்ட் ரோடு ஆற்றுப்பாலம் பகுதியில் இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை ஹேப்பி சன் ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 

தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் தப்பாட்டம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் உற்சாகமூட்டும் கலகலப்பான நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிகளில் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள், பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

அப்போது தஞ்சை மேயர் சண்.ராமநாதனும் மேடையில் மக்களோடு சேர்ந்து நடனம் ஆடி மகிழ்ந்தார். மேயர் உட்பட இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள் என்று பலரும் பல பாடல்களுக்கு நடனம் ஆட,  தஞ்சை நகரமே இன்று விழாக்கோலம் போல் காட்சியளித்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meyar dance in happy streets function in thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->