கன்னியாகுமரி.! மினி வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் மினி வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குன்னங்காடுபகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் ரமேஷ்(28). 

இவர் நேற்று இரவு  தன்னுடன் வேலை பார்க்கும் சுபாஷ்(32) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் நாகர்கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது இரணியல் மேல தெரு அருகே வந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மினிவேன் மீது இருசக்கர வாகனம் மோதியது.

இந்த விபத்தில் இரண்டு பேரும் படுகாயம் அடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுபாஷ் நேற்றிரவும், ரமேஷ் இன்று அதிகாலையிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இரண்டு பேரும் உயிரிழந்து உள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mini van twowheeler accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->