தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா.? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தி வந்தது. தற்போது தான் அதன் தாக்கம் குறைந்து பொது மக்களும் நிம்மதியாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்புளூன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் இந்த காய்ச்சல் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக குழந்தைகள், முதியோர்களை இந்த காய்ச்சல் பாடாய்படுத்தி வருகிறது. சாதாரண காய்ச்சல் என்றால் 3 நாட்களில் சரியாகிவிடும்.

தற்போது பரவி வரும் இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை 5 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை பதம் பார்த்து விட்டுதான் செல்கிறது. அவ்வாறு 7 நாட்களில் இந்த காய்ச்சல் குணமான போதிலும் அதன்பின்பு 3 முதல் 7 நாட்கள் வரை உடல்வலி இருக்கிறது.

வேகமாக பரவும் இந்த காய்ச்சல் காரணமாக புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.

இது இதுகுறித்து அவர் பேசியதாவது, 'இது தொடர்பான முடிவுகளை பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்தாலோசித்து ஒரு முடிவு எடுப்பார்கள். அதன்பின் அவர்களிடம் இருந்து விடுமுறை அறிவிக்கலாம் என்று அறிவிப்பு வந்தால், நாங்கள் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புவோம்' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister anbil Mahesh speech about school holidays influenza virus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->