அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!
minister Duraimurugan in Hospital Chennai DMK
தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகன் (வயது 86) வயதிலும், அரசியல் அனுபவத்திலும் முக்கியமானவர்.
இன்று காலை சென்னை உள்ள தனது வீட்டில் இருந்தபோது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, அவர் கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
இந்த தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நேரில் மருத்துவமனைக்கு சென்று துரைமுருகனை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.
மேலும், அவருக்கு தேவையான சிறப்பு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு, விரைவில் உடல்நலம் திரும்ப மருத்துவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
துரைமுருகனின் உடல்நிலை தற்போது நிலையாக இருப்பதாகவும், தொடர்ந்து கவனிக்கப்ப.ட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
minister Duraimurugan in Hospital Chennai DMK