கருணாநிதி சொல்லியே தண்ணி தரல! சுமூக தீர்வு ஏற்படவில்லை - அமைச்சர் துரைமுருகன்!
Minister Duraimurugan said that a negotiated solution to the Meghadatu issue is tantamount to suicide
மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பது தற்கொலைக்கு சமம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காட்பாடி தாலுகா தேனூர் கிராமத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததாவது, தமிழ்நாடும் கர்நாடகமும் மேகதாது அணை விவகாரத்தில் 38 முறை பேசியும் சுமூக தீர்வு ஏற்படவில்லை.
இதனால் நடுவர் மன்றம் சென்றோம். நேரடியாக கருணாநிதியும் பிரதமராக இருந்த தேவகவுடாவும் பேசியும் அப்போதே நடக்கவில்லை. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து உள்ளோம். பேசிட்டு இருக்கிறோம் என்றால் அது பிரச்சனைக்கு தீர்வாகாது.
வயநாடு விவகாரத்தில் உள்துறை மந்திரி அமைச்சர் என்ன சொன்னார் என்பதை பினாராயி விஜயன் படிக்கிறார். வெள்ளம் என சொல்லி உள்ளார் இதில் பிரளயம் ஏற்படும் எனக் கூறவில்லை.இதில் பினராயி விஜயன் சொல்வது உண்மை.
தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டுகிறார்கள் அதற்கு நாம் நடுவர் மன்றம் கேட்டும் ஆனால் அவர்கள் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் பேசவில்லை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்பது தற்கொலைக்கு சமம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Duraimurugan said that a negotiated solution to the Meghadatu issue is tantamount to suicide