எங்களை ஒழிக்க போறீங்களா? - பொறுப்புள்ள பதவியில் இருக்கேன் இல்லையென்றால்.. ஆவேசத்தில் துரைமுருகன்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் "எல்லோருக்கும் எல்லாம்" என்கிற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கிய நிலையில், அமைச்சர் துரைமுருகன், எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதையடுத்து இந்த விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “திமுக, காங்கிரஸ் கட்சியில்தான் வாரிசு அரசியல் உள்ளதா? ஏன் அதிமுகவில் இல்லையா? அதிமுக - பாஜக இடையே தெரிந்த காதல் ஒருபக்கம் தெரியாத காதல் மறுபக்கம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என தைரியமாக சொல்கிறார். ஆனால், பிரதமர் ஒரு வார்த்தை கூட அதிமுகவை பற்றி பேசவில்லை.

பிரதமர் அவர்களே, தமிழ்நாடு உங்களுக்கு புது அனுபவம், இது வீரம் செறிந்த மண், எங்களை போய் ஒழிக்கிறேன் என சொல்கிறீர்களே? அப்படி சொன்னவர்கள் எல்லாம் ஒழிந்து போனார்கள். பிரதமருக்கு அகங்காரம் இருக்கக் கூடாது. நான் பழைய துரைமுருகனாக இருந்தால் பதில் வேறு மாறி இருக்கும். பொறுப்புள்ள கட்சியில் பொறுப்புள்ள பதவியில் இருக்கிறேன். அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் இருந்த இடத்தில் இருப்பதால் அமைதியாக உள்ளேன்.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதி 26 தொகுதியாக குறைக்கப்பட உள்ளது. ஆனால், வடநாட்டில் பன்றி குட்டி போடுவது போல் தொகுதிகள் பெருகிக் கொண்டு இருக்கிறது. வடநாட்டில் வெள்ளம், நிலச்சரிவு வந்த போது தமிழகத்தில் இருந்து நிதி கொடுத்தோம். தற்போது இங்கு வெள்ளம் வந்து பல பேர் இறந்தார்கள். இதற்கு யாரும் நிதி கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, வந்து எட்டிகூட பார்க்கவில்லை” என்று ஆவேசமாக பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister duraimurugan speech in chengalpat dmk meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->