வேகம் எடுக்கும் கொரோனா பரவல்.. அமைச்சர் கயல்விழிக்கு என்னாச்சு..? மருத்துவமனையில் ரத்த மாதிரிகள் பரிசோதனை..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 5676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 37,093 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 5000 கடந்து உள்ளது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக முழுவதும் 2099 பேர் கொரனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்

இந்த நிலையில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காய்ச்சல் காரணமாக அடையாறில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில் காய்ச்சல் அதிகமானதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை நடைபெற்ற வருகிறது. இந்த சோதனையின் முடிவில் அவருக்கு எந்த வகையான காய்ச்சல் என்பது தெரிய வரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் கயல்விழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Kayalvizhi admitted in Hospital due to increased fever


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->