போலி பத்திரப்பதிவு - அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பத்திரப்பதிவின் போது போலி மற்றும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவு பதிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் மூர்த்தி வலியுறுத்தியுள்ளார். 

பதிவுத்துறை பணியின் போது மறைந்த இரண்டு பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது;- "அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவை பதிவு செய்த மற்றும் செய்யும் அலுவலர்களை கண்டறிந்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

பதிவுத்துறையில் இந்த நிதியாண்டில் ஜூலை 17-ம் தேதி வரை ரூ.5,920 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே நாளின் வருவாயுடன் ஒப்பிடும்போது ரூ.821 கோடி அதிகம்.

அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு திடீர் ஆய்வு செய்து பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் ஆவணப்பதிவு செய்ய வேண்டும்.

ஆவணங்களை உரிய நேரத்தில் ஒப்படைப்பு, போலி மற்றும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவு பதிவுகளை தடுப்பது உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister moorthy order stop duplicate registeration


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->