தமிழக மீன்பிடித் துறைமுகங்களை மேம்படுத்த ரூ.1,200 கோடி..!! மத்திய அமைச்சர் எல்.முருகன் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த ரூபாய் 1200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் "ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் உள்ள மீனவக் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு 126 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் கல்பாசி வளர்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

 இந்த கடிதம் மத்திய அரசின் பரிசீலணையில் உள்ளது. கூடிய விரைவில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள மீன் பிடித்து துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசு 1200 கோடி ரூபாய் நிதி உள்ள ஒதுக்கியுள்ளது.

 குறிப்பாக திருவெற்றியூர் பகுதியில் புதிதாக மீன்பிடி துறைமுகம் அமைக்க 150 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது" என மதிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Murugan said Rs1200 crore allocated for fishing ports


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->