டாஸ்மாக் விவகாரம் | அமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்!
Minister Muthusamy say about TASMAC Shop And Bar issue
தமிழகத்தில் சட்டவிரோத பார்கள் எங்கும் நடத்தப்படவில்லை என்று, அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி தெரிவித்தாவது, "ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 10 இடங்களில் ரூ.16.67 கோடி மதிப்பிலான பணிகளை இன்று துவங்கி வைக்க உள்ளோம்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் 2 மாதத்தில் கணினி மயமாக்கப்படும் பணிகள் நிறைவு பெறும்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் 500 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதே தவிர, புதிதாக எங்கும் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை.
பள்ளி, கல்லூரி, கோயில் மற்றும் மக்களின் புகாரின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அதனை புதிய கடைகள் திறப்பதாக சிலர் பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகள் எதுவும் திறக்கவில்லை" என்று அமைச்சர் தெரிவித்தார்.
English Summary
Minister Muthusamy say about TASMAC Shop And Bar issue