ரணகளத்திலும் குதூகலம் - பள்ளி மாணவிகளுடன் நடனமாடிய அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, "கலைஞர் நூற்றாண்டு" என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, கலைஞரின் பேனா சின்னத்தை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேனா சின்னத்தை திறந்து வைத்தார். இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

அந்த நேரத்தில் சினிமா பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்த மாணவிகள் சிலர், அமைச்சரையும் தங்களுடன் இணைந்து நடனமாட வருமாறு அழைப்பு விடுத்தனர். உடனே அமைச்சரும் அவர்களுடன் இணைந்து, சில நொடிகள் உற்சாகமாக நடனமாடினார். 

இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துக் கொண்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு சிலர் ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், எதிர்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தமிழ்நாடு முழுவதும் மழை காரணமாக பல்வேறு சிரமங்கள் நிலவி வரும் நிலையில், அமைச்சர் குத்தாட்டம் போட்டுக்கொண்டு இருப்பதாக அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister ponmudi dance with school students in vilupuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->