அதிமுகவின் கோட்டையாக விருதுநகர் தொகுதிகள்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பல கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டு இருந்த நிலையில், தொகுதி வாரியான நிர்வாகிகளுக்கு சேர்க்கை படிவத்தை அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி வழங்கினார். 

இந்த கூட்டத்தின் போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, " அம்மாவின் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சிறப்பாக ஆட்சியை நடத்தி வருகின்றனர். 

அம்மாவின் அரசு சிறப்போடு செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இந்த வரவேற்பை வாக்குகளாக நாம் மாற்ற வேண்டும். அம்மாவின் வாக்குறுதிகள் அனைத்துமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களுக்காக இயங்கும் ஒரே இயக்கம் அதிமுக தான்.

தமிழகத்தின் முதல்வராக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி நல்லாட்சியை பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதியையும் அதிமுக கோட்டையாக மாற்ற வேண்டும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Rajendra Balaji Speech 16 October 2020


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->