அண்ணாமலையின் கருத்திற்கு அமைச்சர் பதிலடி! - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவர் திமுக நிர்வாகி என்பது உண்மை அல்ல" என்று  அண்ணாமலைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 21ம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோட்டூர்புரத்தில் சாலையோரம் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக  கைது செய்யப்பட்டு  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளது சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர்.இந்நிலையில், அண்ணா பல்கலைழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் "கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டவர். திமுக நிர்வாகி, தமிழக மக்கள் இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ள வேண்டும்?. மு.க. ஸ்டாலின் இப்போதாவது பொறுப்பேற்பாரா?" என எக்ஸ் பக்கத்தில் பா.ஜ.க. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில்,  அண்ணாமலையின் கருத்திற்கு அமைச்சர் கோவி. செழியன் பதில் அளித்துள்ளார்.இதுகுறித்து கூறிய அவர், "பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவர் திமுக நிர்வாகி என்பது உண்மை அல்ல" என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அவர், " எது நடந்தாலும் திமுகவை குறை கூறுவது அண்ணாமலையின் இயல்பான குணம். அண்ணாமலை கூறுவதால் அது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது என்று அர்த்தமல்ல, அது உண்மையும் அல்ல" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister responds to Annamalai's remark


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->