அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் "1000 ரூபாய்" பொங்கல் பரிசு.., தமிழக முதல்வருடன் ஆலோசனை.! கடைசி நேரத்தில் அமைச்சர் அளித்த பேட்டி.!
MINISTER SAKKARAPANI SAY ABOUT PONGAL GIFT
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு ஜனவரி 3ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட உள்ளது.
21 பொருட்கள் அடங்கிய தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், கருப்பு மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு , மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையே, பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரூ.1000 பணத்தை சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக பொங்கல் தொகுப்பு உடன் ரொக்க தொகை வழங்கப்படுவதை கண்காணிக்குமாறு கூட்டுறவுத் துறையின் செயலாளர் எழுதிய கடிதத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால், அதனை திருத்தி அடுத்தநாளே அரசாணை வெளியாகியது தமிழக மக்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கியது.
இந்நிலையில், "பொங்கலை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு நியாய விலை கடைகளில் வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்படும்” என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
English Summary
MINISTER SAKKARAPANI SAY ABOUT PONGAL GIFT