பொங்கலுக்குள் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பதற்கு வாய்ப்பில்லை - அமைச்சர் சேகர் பாபு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள கோயம்பேட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள் என்று அனைவருக்கும் சிரம் ஏற்படுகிறது. 

இதற்கு தீர்வு காணும் வகையில், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில், 40 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில், இந்த புதிய பேருந்து நிலைய பணிகளை அமைச்சர் சேகர் பாபு மற்றும் அன்பரசன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு தெரிவித்ததாவது:- 

"இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்படும். இந்த பேருந்து நிலையத்தில் மாநகரப் பேருந்துகள், வெளியூர் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் என்று சுமார் 250க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்படவுள்ளது. 

தற்போது ஏற்பட்ட புயல் மற்றும் மழையால் இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கட்டுமானப் பணிகளை விரைவாக முடிப்பதற்கு ஒப்பந்ததாரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பொங்கல் பண்டிகைக்கு முன்பு இந்த பேருந்து நிலையத்தை திறப்பது மிகவும் கடினம். 

இன்று நடைபெற்ற ஆய்வில், பல்வேறு புதிய பணிகளை ஏற்படுத்துவதற்கு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளதால், அந்த பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்குவதற்கு வாய்ப்புள்ளது. தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் போன்ற பேருந்து நிலையங்களை போல், இன்னும் இரண்டு அல்லது மூன்று பேருந்து நிலையங்கள் அமைத்தால் தான் மக்களுக்கு உதவியாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister sekar babu press meet in kilambakkam new bus stand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->