அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இடம் அமலாக்கத்துறையினர் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். 

அதன் பிறகு கடந்த அக்டோபர் 20ஆம் தேதி உடன் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். 

இதனை தொடர்ந்து நவம்பர் 22ஆம் தேதி வரை அவரது நீதிமன்ற காவல் நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி வரை இவரது நீதிமன்ற காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 11 வது முறையாக செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டித்தது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Senthil Balaji Court custody extension


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->