ராமர் இருந்ததற்கு வரலாறே கிடையாது - அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள், ஆடித் திருவாதிரை விழா நடைபெற்றது. இந்த அரசு விழாவில் கலந்து கொண்ட போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-

ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறோம். ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கோவில்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆதாரமாக உள்ளன. 

ராஜேந்திர சோழனை கொண்டாடாவிட்டால் வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் கட்டிவிடுவார்கள். ராமருக்கு 3 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு இருப்பதாக கூறுகிறார்கள்; ஆனால், ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது, ஆதாரமும் கிடையாது. 

ராமரை பற்றி பேசுபவர்களே அவதாரம் என்றுதான் குறிப்பிடுவார்கள். அவதாரம் என்றால் பிறக்க முடியாது. கடவுளாக பிறந்துவிட்டால் அவதாரமாக இருக்க முடியாது. 

நம்மை மயக்கி, நம்முடைய வரலாற்றை மறைத்து வேறு ஒரு வரலாற்றை உயர்த்தி காட்டுவதற்காக தான் இதையெல்லாம் செய்கிறார்கள்" என்று அவர் பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister sivasangar speech about ramar in kangaikonda cholapuram temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->