டாஸ்மாக் கடைகளை எப்போ மூடப் போகிறீர்கள்? - உதயநிதியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். 

அப்போது பேசிய அவர், “கடும் நிதி நெருக்கடியின்போது திமுக ஆட்சிக்கு வந்தது. கொரோனா தடுப்பூசி குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின். இலவச பஸ் திட்டத்தால், பல பெண்கள் பயன் பெற்றுள்ளனர். 

மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட பெண்களுக்கு, 3 மாதங்களுக்குள் வழங்கப்படும். மத்திய அரசு நீட்டிய அனைத்து இடங்களிலும் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் உரிமைகளை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டது என்று பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது, கூட்டத்தில் இருந்த பெண்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை எப்பொழுது மூடப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் உதயநிதி, கடந்த 2019 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் நீங்கள் அவருக்கு ஓட்டு போட்டீங்களா..? அதிமுகவிற்கு தானே ஓட்டு போட்டீங்க என்று பதில் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin epeech in kanchipuram election campaighn


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->