பேச்சால் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் வேலு - வெளுத்து வாங்கும் பாஜகவினர்.!
minister velu speech controvercy
அமைச்சர் பொன்முடி, சைவ சமயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியைத் தொடர்ந்து, கூட்டம் ஒன்றில் அமைச்சர் வேலு பேசிய வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளதாவது:- 'கோவிலுக்கு போகிறோம்; நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தமிழில் பாடுகிறோம். சிவன் கோவிலிலும், வைஷ்ணவ கோவிலிலும் போய், 'சோலி கே பீச்சே' என பாட முடியுமா? நல்லா யோசனை பண்ணு. அப்புறம் எதற்கு ஹிந்தி படிக்கணும்' என்று பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேசியுள்ளார்.
பொன்முடி பெண்களை அவமானப்படுத்தி பேசிய நிலையில், அமைச்சர் வேலு, 'கோவிலுக்கு போய், ரவிக்கைக்கு பின்னால்' என, பெண்கள் மற்றும் கோவில்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தியுள்ளார். தமிழக பெண்கள், தி.மு.க.,வை விரட்டி அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அமைச்சர் வேலு மீதும், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister velu speech controvercy