ரகளை செய்தாலே குண்டர் சட்டம் பாயும்! அமைச்சரின் திடீர் எச்சரிக்கை!
Minister warns Goondas act proceed if govt hospitals are disturbed
அரசு மருத்துவமனைகளில் ரகளை செய்தால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனை மற்றும் மங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக ஹூண்டாய் மோட்டார் மற்றும் இந்தியா பவுண்டேஷன் 2 ஆம்புலன்ஸ்களை இலவசமாக வழங்கியது. அதனை பெற்றுக் கொண்டு மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் கணேசன் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசு மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவர் பணியாளர்கள் இடமும் ரகலையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் குண்டர் பாதுகாப்பு வட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Minister warns Goondas act proceed if govt hospitals are disturbed