அழகிரிக்கு ஆறுதல் சொன்ன ஸ்டாலின் - நடந்தது என்ன?
mk azhagiri son addmitted hospital mk stalin visit
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி சென்னையில் உள்ள நண்பரின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றிற்கு கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி செநின்றுள்ளார். அங்கு அவர் தனது நண்பர்களுடன் பேசிவிட்டு, வீட்டிற்கு செல்லாமல் வேறு ஒரு நண்பரின் வீட்டிலேயே தூங்கி உள்ளார்.
காலை நீண்ட நேரம் ஆகியும் எழாத அவரை நண்பர் எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. உடனே துரையின் மனைவிக்கு நண்பர் போன் செய்து எழுப்ப முயற்சி செய்துள்ளார். ஆனால் அப்போதும் அவர் எழவில்லை. இதையடுத்து துரை தயாநிதி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த தகவல் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்ட அடுத்த நொடியே அவர் மருத்துவமனை சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த நிலையில், நேற்றும் மருத்துவமனை சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின் அங்கிருந்த மு.க.அழகிரிக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துரை தயாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டு குடும்பங்களும் ஒன்றிணைந்துள்ளது திமுகவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
mk azhagiri son addmitted hospital mk stalin visit