ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம்! நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்! - Seithipunal
Seithipunal


தர்மபுரியில் நாளை ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழகம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 8.74 லட்சம் மரங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நகர்ப்புறங்களில் இந்த திட்டத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பு அடுத்து அடுத்த கட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழக முழுவதும் உள்ள 12,500 ஊராட்சிகளில் 20500 முகாம்கள் மூலம் 15 அரசு துறைகளில் 44 சேவைகளுக்காக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது.

இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இதற்காக தர்மபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி ஒன்றுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவினை வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.  மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin launched the Chief Minister program with people in rural areas


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->