அந்த சில அரசியல் சக்திகள் யார்? மறைமுகமாக தாக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


வதந்தி பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுக்க தகவல் தொழில்நுட்பத்தை சில அரசியல் சக்திகள் தவறாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இன்று 50வது பிரிட்ஜ் கருத்தரங்கு (BRIDGE'23) நடைபெற்றது.

இதனை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழிச்சியில் பேசியதாவது, "எல்லா துறைகளிலும் தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப புரட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி.

நாம் கையடக்க தொலைபேசியில் அனைத்து புத்தகங்களும் கிடைக்கின்றன. தொழில் நுட்ப வளர்ச்சியால் கல்வி அறிவு விரல் நுனியில் வந்துவிட்டது.

தமிழகத்தில் அதிகளவில் ஐ.டி பணியாளர்கள் வளர காரணம் திமுக அரசு தான். தமிழகம் ஐடி துறையில் முதல் இடத்தை பிடிக்க திராவிட மாடல் ஆட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தகவல் தொழில்நுட்பதை மேம்படுத்த ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 

சில அரசியல் சக்திகள் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வதந்தி பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுக்க முயல்கின்றனர். இளைய தலைமுறை தகவல் தொழில்நுட்பத்தை தங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்" வ்ன்ஸ்க்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin say about Some political party in social media issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->