பாஜகவின் கனவுகள் பலிக்காது - முதல்வர் மு.க ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். இதனால், மெட்ரோ ரெயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்து விடுகிறது என்று பேசியுள்ளார். 

இதற்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒரு போதும் பலிக்காது. வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை - பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும் - அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள்.

10 ஆண்டு சாதனைகளை சொல்ல எதுவும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படும் நலத்திட்டங்களை கொச்சைப்படுத்துகிறார். பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரெயில்களில் கூட்டமில்லை என புதுப்புரளி கிளப்பி இருக்கிறார் பிரதமர்.

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ஒப்புக்கொண்ட படி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கியுள்ளார் பிரதமர் மோடி. உண்மைகளை மறைத்து, மகளிர் இலவச பயணத்திட்டத்தின் மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார்" இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin tweet about pm modi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->