திருவள்ளுவர் சிலையை பேரறிவு சிலையாக கொண்டாடுவோம் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!
mk stalin tweet about thiruvalluvar statue
உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, தமிழக அரசு சார்பில் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:- "டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 உள்ளிட்ட தேதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாடப்படும். சுனாமி பேரலையின் போதும் கம்பீரமாக உயர்ந்து நின்றார் திருவள்ளுவர்.
இதுகுறித்து டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமத்துவம் போற்றும் உலக பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிறது.
மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அமைத்த சிலையை பேரறிவுச் சிலையாக கொண்டாடுவோம்" என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
English Summary
mk stalin tweet about thiruvalluvar statue