தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது - மறைமுகமாக தாக்கிய முதலவர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நெற்றியில் விபூதி, காவி நிறத்தில் உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின், திருவள்ளுவர் நெற்றியில் விபூதி இல்லாமல், வெண்ணிற ஆடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு, "தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது" என்று வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரின் அந்த செய்தியில், "தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. 

குறள் நெறி நம் வழி!
குறள் வழியே நம் நெறி" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin vs BJP With Thiruvalluvar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->