தமிழகத்தை உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்கள்.. விழுப்புரம் விரைகிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வம்பாமேடு பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் மாலை கள்ளச்சாராயம் குடித்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை தற்பொழுது முன்பதாக உயர்ந்துள்ளது.

மேலும் 40க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதனால் பலர் உயிரிழக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அமரன் என்ற கள்ளச்சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல விழுப்புரம் செல்கிறார். மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்திக்கவும் முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin goes to Villupuram to console bereaved families


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->