தமிழகத்தில் "புரட்சிகரத் திட்டம் செயலாக்கத்திற்கு வந்தது" - மகிழ்ச்சியோடு வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
MKStalin say TamiNadu Govt Building Approval Online Scheme
வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில், தமிழ்நாட்டில் முதல் முறையாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் இணைய தளம் வாயிலாகச் சுயசான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடியாக ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதிகளைப் பெறும் ஒருங்கிணைந்த புதிய திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், உடனடியாக இந்த திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று காலை வழங்கினார்.
இந்நிலையில், இந்த திட்டம் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது X பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "புரட்சிகரத் திட்டம் செயலாக்கத்திற்கு வந்தது!
2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையில் வீடு கட்டப் பல்வேறு அனுமதிகளைப் பெற வேண்டிய நிலை இருந்தது எனது கவனத்துக்கு வந்தவுடனே, நிர்வாக நடைமுறைகளை எளிதாக்க உத்தரவிட்டேன்.
அதனடிப்படையில் உருவாகியுள்ள, பொதுமக்கள் சுயசான்றிதழ் வழங்கி வீடு கட்டும் கட்டட அனுமதியை இணையதளம் வாயிலாக ஒற்றைச் சாளர முறையில் உடனடியாகப் பெறும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
MKStalin say TamiNadu Govt Building Approval Online Scheme