"டாப் 3"ல் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.. இப்படி ஒரு சாதனையா..!!
MKStalin was second in list of cm with criminal cases
கர்நாடகா சட்டமன்ற பொது தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாட்டில் உள்ள 28 மாநில முதல்வர்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்தான விவரங்களை ஜனநாயக மறு சீரமைப்புக்கான கூட்டமைப்பு (ஏ.டி.ஆர்) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு (என்.ஈ.டபிள்யூ) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளது.
அதன்படி, குற்ற வழக்குகள் அதிகம் உள்ள முதல்வர் பட்டியலில் முதல் 3 இடங்களில் தென்மாநில முதல்வர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த பட்டியலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் 37 குற்ற வழக்குகள் உட்பட 64 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து 20 குற்ற வழக்குகள் உட்பட 47 வழக்குகளுடன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
அதேபோன்று 35 குற்ற வழக்குகள் உட்பட 38 வழக்குகளுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மூன்றாம் இடம் பிடித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது 3 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் மீது தலா 2 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
MKStalin was second in list of cm with criminal cases