37 மீனவர்கள் விடுதலைக்கு நடவடிக்கை தேவை.!! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவசர கடிதம்!! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படை நேற்று முன்தினம் ஒரே நாளில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்ததோடு 5 படகுகளை சிறை பிடித்து சென்றுள்ளது. இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 5 மீன்பிடி படகுகளும், அதில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 37 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

தமிழக மீனவர்களின் உரிமைக்காக மத்திய அரசு மேலும் வலுவாக குரல் கொடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். பாக். வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழக மீனவர்களுக்காக வலுவான குரல் கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin write letter to Minister Jaishankar for Tamil fishermen


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->