விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காததால் பரிதவிக்கும் விவசாயிகள்! அரசுக்கு மநீம வைக்கும் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காததால் பரிதவிக்கும் விவசாயிகள், நியாயமான விலை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவில் சாகுபடி செய்யும் விவசாயிகள், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் பரிதவிக்கும் நிலை தொடர்கிறது. 

குறிப்பாக, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால், சாலைகளில் கொட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்டங்களில், வியாபாரிகள் வெண்டைக்காய்க்கு கிலோ ரூ.5க்கும் குறைவாகவே விலை தருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுபோல, பல பயிர்களுக்கு குறைந்த விலையே கிடைப்பதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களுக்கும்  நியாயமான விலை கிடைத்திட தமிழக அரசும்,மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM Say about Farmers issue 9122022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->