ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் பணம் திருட்டு..மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
Money stolen from elderly bus Police arrest suspects!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் ரூ.84 ஆயிரம் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அடிக்கடி பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.குறிப்பாக வழிப்பறி, ஆளில்லா வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் மர்ம ஆசாமிகள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர்.இதனை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள வன்னியூர் கிருஷ்ண விலாசத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் பிள்ளை என்பவருடைய மனைவி சுகன்யா குமாரி.75 வயதான இவர் சம்பவத்தன்று குழித்துறையில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.84 ஆயிரத்தை எடுத்து தனது பையில் வைத்து கொண்டு வீட்டுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது . அப்போது வீட்டிற்கு செல்வதற்காக குழித்தறையில் இருந்து களியக்காவிளை செல்லும் அரசு மகளிர் இலவச பஸ்சில் ஏறிய சுகன்யா குமாரிகளியக்காவிளையில் இறங்க முயன்றார் என கூறப்படுகிறது.

அப்போது தனது பை பிளேடால் கிழிக்கப்பட்டு அதில் இருந்த ரூ.84 ஆயிரம் மற்றும் வங்கி காசோலை புத்தகம் ஆகியவை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து யாரோ மர்ம நபர் சுகன்யா குமாரி பணத்தை எடுத்து வருவதை நோட்டமிட்டு திருடிச் சென்றது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து இதுகுறித்து சுகன்யா குமாரி களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
English Summary
Money stolen from elderly bus Police arrest suspects!