கள்ளக்காதலுக்காக சொந்த மகளையே இணங்க வைத்த தாய்..தட்டித் தூக்கிய போலீஸ்.!
Mother advice to sexual in kanniyakumari
பெற்ற மகளை தன்னுடைய கள்ளக்காதலனுக்கு கூட்டி கொடுத்த தாயையும் கள்ளக் காதலனையும் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே அள்ளம்சேனவிளை பகுதியை சேர்ந்த 48 வயதான ராஜன் என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். அவருக்கு அங்கு வேலை செய்யும் 37 வயது ஸ்மிதா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒரு ராஜன், ஸ்மிதாவின் வீட்டிற்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்மிதாவின் வீட்டிற்கு ராஜன் சென்றுள்ளார்.
ஸ்மிதா வீட்டிற்கு சென்ற ராஜன், ஸ்மிதாவின் மகளான 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், குடும்பமே வறுமையில் இருந்த நிலையில் ஸ்மிதா அவருடன் ஜாலியாக இருக்குமாறு மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு ஸ்மிதாவின் 16 வயது மகள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து பதிவு செய்த போலீஸார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய இருவர் மீதும் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
Mother advice to sexual in kanniyakumari