படி.... படி...படி.. பிஞ்சு குழந்தையை அடித்தே கொன்ற கொடூர தாய்! கோவையில் பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் மெய்யப்பன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி.. சாந்தலட்சுமி தம்பதியினர்.இவர்களுக்கு   10 வயத்தில் அனுஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். அங்குள்ள பள்ளி ஒன்றில்  5ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த மே 17ம் தேதி, அனுஸ்ரீ திடீரென உடல் நலக்குறைவால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் என்ன ஆயிற்று குழந்தைக்கு என்று கேட்டதற்கு கட்டிலில் இருந்து விழுந்து விட்டதாக கூறியுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக  கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி பரிந்துரைத்துள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தந்தை தட்சணாமூர்த்தி, செல்வபுரம் போலீசுக்கு சென்று, மகள் இறந்தது குறித்து புகார் அளித்தார். இதனால் போலீசார் குழந்தையின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பினார்கள். 

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், சிறுமிக்கு உடல் முழுவதும்  33 காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இது தொடர்பாக சிறுமியின் அம்மா சாந்தலட்சுமியிடம் விசாரித்தபோது,  தன் மகளை  சிறுவயது முதலே அடித்து கொடுமை படுத்தியிருப்பது தெரியவந்தது.  நன்றாக  படிக்கக்கூடிய அனுஸ்ரீ யை  எந்நேரமும்  கரண்டியால் அடித்து மேலும் படிக்கும்படி கூறுவாராம்.

இதனால் அந்த குழந்தை எந்நேரமும் அழுதுகொண்டே இருக்கும் என்று அக்கம் பக்கத்தினரும் தெரிவித்துள்ளனர் தொடர்ந்து அடித்து வந்ததால்,  சிறுமியின் உடலில் பல இடங்களில், தசைகள் கன்றி போய் உள்காயம் ஏற்பட்டு, பல்வேறு பகுதிகளில் தசைகள் சிதைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  சாந்தலட்சுமியை போலீசார் கைது செய்துள்ளனர். பிள்ளை பாக்கியம் வேண்டி எத்தனையோ தம்பதியினர் கோவில் குளங்களை சுற்றிவரும் நிலையில், பெற்ற குழந்தையை அடித்தே சாகடித்திருப்பது தமிழகத்தியே உலுக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother who beat the child in coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->