விரைவில் திமுகவிற்கு வனவாசம் - ஜெயக்குமாரின் கருத்துக்கு எம்.பி கனிமொழி பதிலடி.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவிற்கு வனவாசம் என்று கூறியுள்ளார். இதற்கு திமுக எம்.பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

"ஜெயக்குமாருக்கு வேறு வேலைக்கு போக முடியவில்லை என்பதாலும், அதிகவிற்கு வேறு வேலை என்பதாலும் பகுதி நேரமாக ஆருடம் சொல்ல ஆரம்பித்துள்ளார். அப்படி பார்க்கக்கூடியவர்கள் இப்படி பேசவும் செய்வார்கள். ஒரு பயத்தில் இருந்து வரக்கூடிய கருத்துகள்தான் இது.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. என்னென்ன பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் படியும், அங்கு இருக்கக்கூடிய மற்ற கட்சிகளிடமும் கலந்து பேசிதான் முடிவு எடுக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp kanimozhi response ex mla jayakumar comments


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->