ரெயில் விபத்து செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன் - எம்.பி. கனிமொழி.!
mp kanimozhi tweet about thiruvallur train accident
கர்நாடகா மாநிலம் மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரயில் விபத்துக் குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நிகழ்ந்த மைசூர் - தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். விபத்து நிகழ்ந்த பகுதியில் தமிழக அரசு சார்பில் மீட்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரிதப்படுத்தியுள்ளார்.
இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், துயர் சூழ்ந்த இந்த வேளையில், அவர்களின் குடும்பத்தினர் உறுதியுடன் இருக்கவும் விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
mp kanimozhi tweet about thiruvallur train accident