பொம்மன் -பெள்ளி தம்பதியினரை சந்திக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்.!
ms dhoni meet bomman belli couples soon
கார்த்திகி என்ற பெண் இயக்குனர் இயக்கியிருந்த ஆவணப்படம் தி எலிபன்ட் விஸ்பரர்ஸ். இந்த படம் நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் தாயை பிரிந்த யானை குட்டிகளையும் அவற்றை பராமரித்து வந்த பாகன் தம்பதியர் இடையேயான பாச உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
இந்த படம் பலராலும் பாராட்டப்பட்டதோடு ஆஸ்கர் விருதையும் வென்றது. இந்த படத்தின் மூலம் பொம்மன் - பெள்ளி தம்பதியினர் சர்வதேச அளவில் புகழ் பெற்றனர்.
இந்த தம்பதியினருக்கு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என்று பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் யானை பராமரிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பெள்ளிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணையை வழங்கினார்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியில் பொம்மன் - பெள்ளி தம்பதியினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
அதன் பின்னர் அந்த விழாவில் பேசிய அவர்கள், "ஆஸ்கர் விருதுக்குப் பிறகு முக்கிய தலைவர்கள் அரசியல் பிரபலங்கள் என்று பலரும் எங்களை பாராட்டியது மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் கிரிக்கெட் வீரர் தோனியும் எங்களை பார்க்க வருவதாக தெரிவித்துள்ளார்" என்று பேசியுள்ளனர்.
English Summary
ms dhoni meet bomman belli couples soon