விபத்தில் கணவரை  இழந்த பெண்ணின் மறுமணத்தை காரணம் காட்டி இன்சூரன்ஸ் தொகையை மறுக்க முடியாது ஹைகோர்ட் அதிரடி! - Seithipunal
Seithipunal


திருமணமான பெண்ணின் கணவர் எதிர்பாராத விதமாக இறந்து விடும் நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணின் மறுமணத்தை மட்டும் ஒரு காரணமாக வைத்து, இறந்த அவரின் கணவருக்கு கிடைக்க வேண்டிய பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் தர மறுக்க முடியது என்று , மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த இருசக்கர வாகன விபத்தில் 19 வயது இளம் பெண்ணின் கணவர் கணேஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். 

கணேஷ் உயிருடன் இருந்த பொழுது இப்ஃகோ டோக்கியோ இன்சூரன்ஸ் கம்பெனியில் விபத்து காப்பீடு செய்திருந்தார். கணேஷ் இறந்த சில நாட்கள் கழித்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் கணவர் செலுத்திய இன்சூரன்ஸ் பணத்தை கேட்டபோது அந்நிறுவனம் தர மறுத்துள்ளது. 

இதற்கிடையே, இளம் பெண்ணிற்கு அவரின் பெற்றோர்கள் இரண்டாம் திருமணம் செய்து வைத்தனர். இந்த இரண்டாம் திருமணத்தை காரணம் வைத்து, இன்சூரன்ஸ் பணத்தை அந்நிறுவனம் தர மறுத்துள்ளது.

இதுகுறித்து மும்பை நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் மனுதாக்கல்செய்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நேற்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக ஒரு 19 வயது இளம் பெண், தன் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பெண்ணின் மறுமணத்தை மட்டும் காரணமாக வைத்து இன்சூரன்ஸ் பணத்தை தர மறுக்கவும் முடியாது" என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இன்சூரன்ஸை வழங்க உத்தரவிட்டதுடன், அந்நிறுவனம் செய்த மேல்முறையீட்டு வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai HC order For insurance case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->