அரசு பேருந்துகளுக்கு புதிய திட்டம்; மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


​ஜிஎஸ்டி சாலையில் பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

 சென்னையில் ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட  உள்ளதாக மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. குறித்த திட்டம் ஜனவரி 2025ல் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

எம்டிசி பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணியும், முக்கிய சிக்னல் புள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து கழகம் கூறியுள்ளது. இந்த பஸ் சிக்னல் முன்னுரிமை அமைப்பு எம்டிசி பஸ்சைக் கண்டறிந்து, சிவப்பு சிக்னலின் கால அளவைக் குறைத்து, கிரீன் சிக்னலை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பஸ்கள் தேவையற்ற நிறுத்தங்கள் இல்லாமல் கடந்து செல்ல முடியும். எம்டிசி பேருந்துகளுக்கு இந்த டைனமிக் மாற்றங்களால் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த டைனமிக் மாற்றங்கள் நிகழ்நேரத் தரவை அடிப்படையாகக் கொண்டுள்ளதோடு, இது ஒட்டுமொத்த போக்குவரத்து ஓட்டத்தின் செயல்திறனைப் பாதுகாக்கும். அத்துடன், பொதுப் போக்குவரத்து வாடிக்கையாளர்களுக்கு நன்மைகளை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன எனவும்  மாநகரப் போக்குவரத்து கழகம்  தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Municipal Transport Corporation announces new scheme for government buses


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->