திமுக எம்பிக்கு எதிரான கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கடலூர் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு கடந்த 2021 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த கொலை வழக்கு கடலூர் மாவட்ட நீதிமன்றத்தின் விசாரணையில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் அமைந்துள்ளதால் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் திமுக எம்பி ரமேஷ் கலந்து கொள்கிறார்.

இதனால் அரசு அதிகாரிகள் திமுக எம்பி உடன் நேரடி தொடர்பில் உள்ளனர். மேலும் அரசு தரப்பு சாட்சிகளாக உள்ள ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதால் நியாயமான விசாரணை நடத்த இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கொலை செய்யப்பட்ட கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்பொழுது விசாரணை நீதிமன்றம் அமைந்துள்ள மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கொலை வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு போதுமான காரணமாக அமைந்துள்ளது.

அதன் அடிப்படையில் இந்த வழக்கு புதுச்சேரி மாநில நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் புதுச்சேரி வேறு மாநிலம் என்பதால் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டம் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றியதோடு இந்த வழக்கின் ஆவணங்களை உடனடியாக கடலூர் நீதிமன்றத்தில் இருந்து செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murder case against DMK MP Ramesh transferred to Chengalpattu court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->