முறையற்ற காதலில் தகராறு! பெண்ணை கொலை செய்த நபரிடம் காவல்துறை விசாரணை.! - Seithipunal
Seithipunal


முறையற்ற காதல் விவகாரத்தில் பெண்ணை கொலை செய்த நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குன்றத்தூர் பேருந்து நிலையத்தில், ரத்தக்கறையுடன் ஒருவர் அமர்ந்திருப்பதை கண்ட காவலர்கள், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், அவர் பெயர் ராஜா என்றும் கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை கொலை செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், ரத்தவெள்ளத்தில் கிடந்த கண்ணம்மாள் என்பவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், குன்றத்தூர் ஜெகநாதபுரம் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த கண்ணம்மாளுக்கும், ராஜாவுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்தது தெரிய வந்தது. 

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் ராஜா மது போதையில் கண்ணம்மாவின் வீட்டிற்கு வந்து அவரிடம் தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே பிரச்சனை அதிகமாகி, வாக்கு வாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் ராஜா கன்னம்மாவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக காவல்துறையிடம் கூறியுள்ளார்.

இதனை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்ட காவலர்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murder in Kunrathur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->