அண்ணன் மகளுக்கு தொல்லை கொடுத்த இளைஞர்... தட்டிகேட்ட சித்தப்பாவிற்கு நடந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


அண்ணன் மகளுக்கு தொல்லை கொடுத்தவரை தட்டிக்கேட்ட சித்தப்பா கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரின் அண்ணன் மகள் அனிதாவிற்கு பாண்டி என்பவருடன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அனிதாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞர் போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

 இதனை அறிந்த அவரது  கணவர் பாண்டி அனிதாவின் சித்தப்பாவிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த செந்தில் தனது மகனை அழைத்துக்கொண்டு  முத்துக்குமார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் . ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.

இதனையடுத்து செந்தில் தனது மகன் ஏற்றுக்கொண்டே இருசக்கர வாகனத்தின் மூலம் அங்கிருந்து செல்ல முற்பட்டுள்ளார். அப்போது முத்துக்குமார் தான் ஓட்டி வந்த காரை செந்திலின் இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியுள்ளார்.  இதில், இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே செந்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

செந்திலின் மகன் அளித்த தகவலின்படி விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.  இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் மற்றும் அவரது தாயார் ஆகியோரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murder Near Viruthunagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->