JEE நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடியின மாணவிகளுக்கு ஜி.வி பிரகாஷ் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டுக்கான (2024) ஜேஇஇ தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா உள்ளிட்டோர் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் இவர்கள் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடி-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை பெற்றனர்.

இதில் மாணவி ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மாணவி ரோகிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்ற சுகன்யாவிற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "JEE நுழைவுத்தேர்வில் வென்று திருச்சி NIT யில் பயில போகும் அன்புத்தங்கை சுகன்யா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள். "கல்வி ஆகச்சிறந்த செல்வம்" அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

music director gv prakash wishes to sheduled student jee exam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->