இசைஞானிக்கே இந்த நிலைமையா? - கோயில் கருவறைக்குள் செல்ல முயன்ற இளையராஜா தடுத்து நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்ற போது அவரை தடுத்து நிறுத்தி வெளியேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மார்கழி மாதம் பிறந்துள்ளது. இம்மாதத்தில் திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று, ஆண்டாள் பாடிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி உள்ளிட்ட பாசுரங்களைப் பாடி துதிப்பர். 

இந்த வழிபாடு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலயத்திலும் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், மார்கழி முதல் தேதியில் ஆண்டாளை தரிசிக்க, இசைஞானி இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அதிகாலையிலேயே சென்றுள்ளார். 

அதன் படி அவர் சுவாமி தரிசனம் செய்ய ஆண்டாள் கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் நுழைய முயன்றபோது, அங்கு இருக்கும் அந்தணர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் இளையராஜா அங்கிருந்தபடியே கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

இந்தச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை அறிந்த நெட்டிசன்கள் இறைவனை பல பாடல்களில் பாடிய இசைஞானிக்கே இந்த நிலைமையா..? என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

music director ilaiyaraja expelled srivillipuththur aandal temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->